Deaddiction Awareness program for school children

WhatsApp Image 2022-10-22 at 11.14.36 AM

Deaddiction Awareness program for school children

தொன் போஸ்கோ அன்பு இல்லம் மற்றும் புனித தெரசாள் தொழிற்பயிற்சி மையம் இணைந்து நடத்திய போதையின் பாதை மாற போதைநோய் விழிப்புணர்வு நிகழ்வு இன்று 20.10.2022 வியாழக்கிழமை புனித தெரசாள் தொழிற்பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் வரவேற்புரையை வழங்கிய புனித தெரசாள் தொழிற்பயிற்சியின் தாளாளர் அருட்சகோதரர். ஆசீர்வாதம் அவர்களும், இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த தொன் போஸ்கோ அன்பு இல்லத்தின் இயக்குநர் அருட்பணி. முனைவர். மோ. கஸ்மீர் ராஜ் ச.ச., அவர்களும், விழிப்புணர்வின் சிறப்பு அழைப்பாளர் அருட்பணி. முனைவர். ஆ. சிலுவை முத்து ச.ச., அவர்கள் போதையின் விளைவுகள் பற்றியும், போதையில் இருந்து மாணவர்களை மீட்டெடுப்பதற்கும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது, இந்நிகழ்வில் குழந்தைகள் நலக் குழுமம் உறுப்பினர் திருமதி. பத்மினி அவர்கள் கலந்துக்கொண்டார்கள். இன்று போதையின் விளிம்பில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர் போதையில் இருந்து மாணவர்கள் முழுமையாக விடுபட தொன் போஸ்கோ அன்பு இல்ல இயக்குநர் அருட்பணி. முனைவர். மோ. கஸ்மீர் ராஜ் ச.ச., அவர்கள் முழுமுயற்சியோடு கடந்த 14.10.2022 முதல் 21.10.2022 வரை கடந்து ஒரு வாரமாக விழிப்புணர்வு நிகழ்வினை நிர்மலா மேல்நிலைப்பள்ளி, கொளத்தூர், சிறுமலர் மேல்நிலைப்பள்ளி சேலம், சிறுமலர் மெட்ரிக் பள்ளி, சேலம் மற்றும் புனித தாமஸ் மெட்ரிக் பள்ளி சன்னியாசிகுண்டு ஆகிய அனைத்துப்பள்ளிகளிலும் 5000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சென்றடைய ஏற்பாடு செய்துள்ளார்கள். சேலத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் மாணவர்களை போதையில் இருந்து விடுபடவும், போதையில்லா மாவட்டத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு போதையின் பொருட்களை விற்க தடைசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Comment

Your email address will not be published.