Continue Education (Dropout) Centre Parents Meeting (தொடர் கல்வி மையத்தில் பயின்று வரும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்துரையாடல் கூட்டம்)
(27-7-2022)
வெண்ணந்தூர் அலுவலகம், தொடர் கல்வி மையத்தில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்துரையாடல் கூட்டம் திரு.சேவியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
*இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வன். அபிஷேக் அவர்களும், தொடர் கல்வி மையத்தில் பயின்று வரும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கள ஒருங்கிணைப்பாளர்களும், கலந்துகொண்டனர்.
*கள ஒருங்கிணைப்பாளர் செல்வி.கீதா அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். மேலும் பெற்றோர் கூட்டத்தின் முக்கியத்துவமும் அதன் பயன்களும் பற்றி பேசினார்.
*தொடர் கல்வி மையம் ஆசிரியர் செல்வி. காயத்ரி அவர்கள் நமது தொடக்க மையத்தில் பயின்று வரும் மாணவ மாணவிகளின் கல்வி தரத்தை பட்டியலிட்டு தகவல்களை பெற்றோர்களுடன் கலந்துரையாடல் செய்தார். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகள் மற்றும் கல்வி தரத்தை குறித்தும் கேள்விகள் எழுப்பி அதற்கான பதில்களும் மற்ற பெற்றோர்களுடன் தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
*திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வன்.அபிஷேக் அவர்கள் குழந்தைகளிடம் பெற்றோர்கள் எவ்வளவு நேரம் செலவழிக்கின்றனர் என்பதைப் பற்றியும் குழந்தைகளின் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் தோல்வியடைந்த மாணவ மாணவிகள் துவண்டு போகாமல் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்பதைப் பற்றியும், செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றியும் பேசினார்.
* திட்ட இயக்குனர் திரு. சேவியர் அவர்கள் சிறப்புரையாற்றினார் பெற்றோர் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவித்தார். தேர்வில் தோல்வியடைந்த மாணவ மாணவிகள் துவண்டு போகாமல் தொடர்கல்வி மையம் அவர்களுக்கு அடித்தளமாக இருந்து அவர்களுக்கு உதவி புரியும் என்றும் அப்பெற்றோர்களும் குழந்தைகளை புரிந்து கொண்டும், குழந்தைகளுக்கு பாதுகாப்பாகவும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் வெற்றிக்கு வழிகாட்டியாக இருப்பதற்கு சில உதாரணங்கள் கூறி அவர்களுடன் கலந்துரையாடல் செய்தார்.
*மேலும் பெற்றோர்கள் குழந்தைகளை எந்த அளவிற்கு புரிந்து கொண்டுள்ளனர் என்பதை பற்றி அறிந்து கொள்வதற்காக பெற்றோர்களிடம் சில கேள்விகளை எழுப்பினார்.
*குழந்தைகள் பற்றிய நல்ல விதமான நான்கு விஷயங்களை பேசும் படி கூறினார். பெற்றோர்களும் அவர்கள் குழந்தைகளைப் பற்றி நான்கு விஷயங்களை கூறினார்.
*இதில் ஒரு மாணவர் பெற்றோர் தன் மகன் பறவைகளையும்,
விலங்குகளையும் பாதுகாப்பதும் வளர்ப்பதில் ஆர்வம் அடைகிறான் மற்றும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வவமும் இருக்கின்றது என்று கூறினார். அனைவருக்கும் உதவும் மனப்பான்மை உடையவர். வீட்டில் அம்மாவிற்கு உதவியாக அனைத்து வேலைகளையும் செய்வார் என்று கூறினார். இதற்கு திட்ட இயக்குனர் திரு. சேவியர் அவர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்தார்.
*இதுபோன்ற ஒவ்வொரு பெற்றோர்களும் குழந்தைகளை நன்கு அறிந்து புரிந்து கொண்டு அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
*மேலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தொலைபேசி மேலாண்மை பற்றியும் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதையும் மாணவ மாணவிகள் தோல்வி அடைந்ததற்கு காரணம் பெற்றோர்கள் மட்டுமல்ல அவர்கள் படிக்கின்ற பள்ளியியும்,பள்ளியின் ஆசிரியர்கள் தரமான கல்வியை கற்றுக் கொடுத்திருந்தால் அவர்களின் நிலைமை மாறி இருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் மாணவ மாணவிகள் படிக்கின்ற பள்ளியில் தான் குழந்தையின் கல்வி தரத்தை பற்றி கேள்விகள் எழுப்பி குழந்தைகளின் பற்றி தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதைப் பற்றி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு அளித்தார்.
* தொடர் கல்வி மையத்தில் பயின்று வரும் மாணவி செல்வி. வித்யா அவர்களின் பெற்றோர் தந்தை அனைத்துப் பெற்றோர்களும் குழந்தைகளும் தொன்போஸ்கோ அன்பு இல்லம் நிறுவனத்தின் இந்த இலவச பயிற்சியை பயன்படுத்தி குழந்தைகள் தேர்வில் வெற்றி தேர்ச்சி பெற்று அவர்களின் வாழ்க்கையை விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்து பயின்று வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.
*ஒவ்வொரு பெற்றோர்களும் அவர்களின் கருத்துக்களையும் இந்த ஆண்டு தொடர் கல்வி மையம் இலவசமாக தன் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. எங்கள் குழந்தைகளின் கல்விக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பது என்றும் எங்கள் குழந்தைக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி எங்கள் குழந்தைகள் தேர்வில் வெற்றி பெறுவார்கள் என்பதை பற்றியும் அவர்களை தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
*மேலும் பள்ளியில் கூட பெற்றோர் கூட்டம் நடைபெறுவது இல்லை கடந்த ஒரு மாதம் எங்கள் குழந்தை பெற்று வரும் இந்த தொடர் கல்வி மையத்தில் பெற்றோர்கள் கூட்டத்தில் அனைத்து பெற்றோர்களும் ஒருங்கிணைத்து எங்கள் குழந்தைகள் பற்றிய கல்வியின் தரத்தை பற்றியும், குழந்தைகள் பற்றியும் தெரிந்து கொண்டு எங்களுக்கு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொடுத்த தொன்போஸ்கோ அன்பு இல்லம் நிறுவனத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை பெற்றோர்கள் தெரிவித்தனர்.
*தொடர் கல்வி மைய ஆசிரியர் செல்வி. காயத்ரி அவர்கள், நன்றியுரையாற்றினார்.