Civil Society Meeting on 29.08.2022
கிச்சிப்பாளையம் வார்டு 44, தேசிய புனரமைப்பு காலனி பகுதியில் தொன் போஸ்கோ அன்பு இல்லத்தின் மூலம் குழந்தை நேய சேலம் ஆதரவாளர்கள் குழு கூட்டமானது நடைபெற்றது. இதில் குழந்தை நேய சேலம் திட்ட பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது. மேலும் அப்பகுதியில் குழந்தைகள் சார்ந்த முக்கிய பிரச்சனையான குழந்தைகள் தொடர்ந்து பள்ளி செல்லா வண்ணம் இடைநிற்றல் நிலை காணப்படுவது குறித்தும், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் உள்ளிட்டவைகளில் குழந்தைகளை பாதுகாப்பது குறித்தும் கலந்துரையாடல் செய்யப்பட்டது. மேலும் குழந்தைகள் சார்ந்த பிரச்சினைகளில் பெற்றோர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஏற்படும் சாவல்கள் பற்றியும் இவற்றை எதிர்கொள்ளும் விதங்கள் பற்றியும் கூறி ஆலோசனை வழங்கப்பட்டது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உதவி எண்கள் அரசின் உதவி திட்டங்கள் பெறுவது மற்றும் பகுதியின் மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரின் இடைவிலகல் கல்வியியை தொடர வழிவகை செய்வது குறித்தும் பேசப்பட்டு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. இக்கூட்டத்தை தொன் போஸ்கோ அன்பு இல்லம், குழந்தை நேய சேலம் கள ஒருங்கிணைப்பாளர் திரு.கார்த்திக் மற்றும் கிச்சிப்பாளையம் சிறார் தொடர்பு மையத்தின் பணியாளர் திருமதி.மெட்டில்டா ஆகியோர் ஒருங்கிணைந்து கூட்டத்தை மேற்கொண்டார்கள்.