பள்ளி இடைவிலகல், குழந்தைகள் கணக்கெடுப்பு மற்றும் இனங்கண்டறிதல் பணி
07.09.2022 தொன் போஸ்கோ அன்பு இல்லத்தின் திறந்தவெளி புகலிடம் திட்டத்தின் கீழ் பணிபுரியும் கிச்சிப்பாளையம் புறத் தொடர்பு மைய பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் பள்ளி இடைவிலகல் குழந்தைகள் கணக்கெடுப்பு மற்றும் இனங்கண்டறிதல் பணியின் தொடர்ச்சியாக சேலம் மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் திருமிகு.ஜெயந்தி அவர்களும், குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் திருமிகு.பிரமிளா அவர்களும் அப்பகுதியை பார்வையிட்டார்கள். மேலும் பள்ளி செல்லாத குழந்தைகளையும், அவர்களது பெற்றோர்களையும் சந்தித்து பேசினார்கள். தொன் போஸ்கோ அன்பு இல்லம் – திறந்தவெளி புகலிடம் திட்டத்தின்; பணியாளர்கள் திரு.வெள்ளியங்கிரி திருமதி.மெட்டில்டா மற்றும் குழந்தைகள் நேய சேலம் திட்டத்தின் பணியாளர் திரு.கார்த்திக் ஆகியோர் உடனிருந்து கிச்சிப்பாளையம் பகுதியை உள்ளடங்கிய 11 இடங்களுக்கு அழைத்து சென்று பள்ளி இடைவிலகல் குழந்தைகளை அடையாளப்படுத்தினார்கள்.