குழந்தைகளுக்கான தேர்தல் அறிக்கை
இன்று 24.3.2021 தொன் போஸ்கோ அன்பு இல்லத்தில் காலை 11.30 மணி அளவில் குழந்தை நேய சேலம் சார்பாக பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு நடைபெற்றது. பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு வருகின்ற தமிழ் நாட்டின் சட்டமன்றத் தேர்தலை குழந்தைகளின் எதிர்கால நலன்/ பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பல்வேறு ஆய்வுகள் நடத்தி இதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான உரிமைகளை மீட்டு பாதுகாப்பதற்கான தேர்தல் அறிக்கை சாசனம் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. இப் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் 5-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் அறிக்கையை பெற்றுக்கொண்ட பத்திரிக்கையாளர்கள் கண்டிப்பாக குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லுவோம் என்று உறுதி அளித்து சென்றார்கள்.