“குழந்தைகளுக்கான சங்கமம்”(YaR children live in 2022) முதல்நாள் 26.11.2022
தேசிய குழந்தைகள் தினம் மற்றும் உலக குழந்தைகள் தின விழா கொண்டாட்டமானது திருச்சி சலேசிய சபையின் பணித்தளங்களில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையங்களான சேலம் தொன் போஸ்கோ அன்பு இல்லம் – முள்ளுவாடி கேட் மற்றும் அடிவாரம், தொன் போஸ்கோ அரவணைப்பு இல்லம் நிலவாரப்பட்டி – சேலம், தொன் போஸ்கோ அன்பு இல்லம் – நாமக்கல் ஆகிய நான்கு இல்லங்கள் இணைந்து “குழந்தைகளுக்கான சங்கமம்”(YaR children live in 2022) நிகழ்ச்சி 26.11.2022 சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்வியில் நிமிர் போதையை தவிர் என்ற கருத்துரையை மையமாக வைத்து இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் வரவேற்பு உரையை அன்பு இல்ல இயக்குனர் அருட்தந்தை.முனைவர். கஸ்மீர் ராஜ் ச.ச. அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வாழ்த்தி வரவேற்புரையை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக சேலம் இன்னர் வீல் கம்பெனியின் தலைவர் திருமதி.கவிதா மோகன்ராஜ், முன்னாள் தலைவர் திருமதி.கரோலின் சாந்தி ஜோசப், முன்னாள் தலைவர் திருமதி.பேபி ராணி சுப்ரமணி மற்றும் மற்ற உறுப்பினர்கள் திருமதி.கௌரி சௌமியா நாராயணன், திருமதி.ரேவதி அருண் பொருளாளர், திருமதி. சசி மகாதேவன், திருமதி.எலிசபெத் ராஜ்குமார் மற்றும் நன்கொடையாளர் திரு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியின் முதன்மை சிறப்பு விருந்தினராக திருமிகு.தையல் நாயகி, துணை கண்காணிப்பாளர் சேலம் ஊரகம், அவர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வின் சிறப்பாக சேலம் தொன் போஸ்கோ அன்பு இல்லம் வழங்கிய கல்வியில் நிமிர் போதையை தவிர் என்ற போதை விழிப்புணர்வு பற்றிய குறும்படத்தை வெளியிட்டார்கள். மேலும் குழந்தைகளை வாழ்த்தி குழந்தைகள் கல்வியில் மென்மேலும் வளர்ந்து வாழ்க்கையில் உயர்ந்த சிகரத்தை அடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இவ்விழாவில் 150 தொன் போஸ்கோ அன்பு இல்ல குழந்தைகள் பங்கெடுத்து மகிழ்ச்சியுடன் சிறப்பித்தார்கள்.