பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பில் சேலம் தொன் போஸ்கோ அன்பு இல்லத்தின் பங்கு

SMC 1

பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பில் சேலம் தொன் போஸ்கோ அன்பு இல்லத்தின் பங்கு

சேலம் தொன் போஸ்கோ அன்பு இல்லம், நாமக்கல் ராசிபுரம் ஒன்றியத்தில் 30 கிராமங்களிலும், வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 20 கிராமங்களிலும், சேலம் மற்றும் வீரபாண்டி ஒன்றியத்தில் 20 கிராமங்களில் வளர் இளம்பெண்கள் மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறது. மேற்கண்ட கிராமங்களின் அருகாமையில் உள்ள துவக்க நிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வியை பெறும் வகையில் பள்ளி மேலாண்மை குழுவில் சமூக அக்கறையுள்ள பெற்றோர்களை உறுப்பினர்களாக்க சமீப காலங்களில் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு பணியில் கள அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை மேற்கண்ட கிராமங்களில் ஆரம்ப பள்ளிகளில் 58 பேரும், நடுநிலைப்பள்ளிகளில் 63 பேரும், மேல்நிலைப்பள்ளிகளில் 2 பேரும், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதில் பள்ளி மேலாண்மைக்குழுவின் பங்கு மற்றும் பொறுப்புகள் பற்றி தொடர்ந்து கருத்துரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சேலம் தொன் போஸ்கோ நிறுவனம் பணிபுரியும் பணித்தளங்களில் உள்ள அருகாமை அரசு பள்ளிகளின் தரம் உயர்வதற்கு வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.

Leave a Comment

Your email address will not be published.