Grama Sabha Meeting

Grama Sabha

Grama Sabha Meeting

The Gram Sabha is the fulcrum of the Panchayati Raj and village development. People use the forum of the Gram Sabha to discuss local governance and development, and make need-based plans for the village. DBAI Staff & Volunteers participated in various meetings and expressed the need to create a child-friendly city and cater to the needs of the people.

கிராம சபா கூட்டம்2.10.21 காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட18 கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர்களின் தலைமையில் காலை 10 மணி முதல் கிராம சபா கூட்டமானது நடைபெற்றது.மேலும் இக்கூட்டத்தில் தொன்போஸ்கோ அன்பு இல்ல இயக்குனர், அருட்தந்தை, கஷ்மிர் ராஜ் அவர்கள் மற்றும்தொன்போஸ்கோ அன்பு இல்ல திட்ட இயக்குனர், திரு சேவியர், ஆகியோர்தலைமையிலும் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு . ரினால்டி அவர்கள் முன்னிலையிலும் நமது களப் பணியாளர்கள் மற்றும் CSG ,SHG குழு உறுப்பினர்களை கொண்டு கிராம சபாகூட்டத்தில் கிராமத்தில் உள்ள கீழ்க்கண்ட பிரச்சினைகளுக்கு மனு கொடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.1. தொன்போஸ்கோ அன்பு இல்லத்தின் மூலமாக நடைபெறும் மாலை வகுப்பு மையத்திற்கு பொது இடம் வேண்டி மனு கொடுக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.2. விளையாட்டு மைதானம் அமைத்துதருவதாக கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.3. தூய்மையான குடிநீர் வீடுதோறும் அமைத்து தருவதாக கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.4.பெண்கள் கழிப்பிட வசதி ஏற்படுத்துவதாக தீர்மானம் போடப்பட்டு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.5. சாக்கடை வசதி ஏற்படுத்தி தருவதாக கூறி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.6. தெருவிளக்கு அமைத்து தருவதாகக் கூறி மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் போடப்பட்டுள்ளது.7. அங்கன்வாடி மையம் மறுசீரமைப்பு அமைத்து தருவதாக கூறி தீர்மானம் போடப்பட்டுள்ளது.,8. துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தருவதாகக் கூறிதீர்மானம் போடப்பட்டு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.போன்ற பல்வேறு காரணங்களுக்கு நமது குழு உறுப்பினர்களுடன் இணைந்து பஞ்சாயத்துத் தலைவர்களிடம் மனு கொடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இக்கூட்டத்தில் பெண்கள் மற்றும்குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழி ஆனது ஆசிரியர்கள் ,அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும்அன்பு இல்ல பணியாளர்கள் இணைந்து கிராம மக்களிடையே குழந்தை திருமணம் செய்யக்கூடாது என்றும் குழந்தைகளைப் பாலியல் ரீதியான பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்க வேண்டுமென ஒரு மண கருத்தோடு அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.கலந்துகொண்ட கிராமங்களின் விபரங்கள், 1.அணைப்பாளையம் 2. கவுண்டம்பாளையம் 3. பூசாரிபாளையம் 4. காக்காவேரி 5. வடுகம் 6. PM பாளையம் 7. குருக்கபுரம் 8. கோப்பம்பட்டி 9. கோனேரிப்பட்டி 10. தொப்பம்பட்டி 11. தொட்டியபட்டி 12. அரசபாளையம் 13. வேலம்பாளையம் 14. மோளப்பாளையம் 15. கூனவேலம்பட்டி 16. முத்து காளிப்பட்டி 17. சிங்களாந்தபுரம் 18. கரட்டுப்பட்டி

Leave a Comment

Your email address will not be published.